ஸ்மார்ட் ரேஷன் கார்டில் சிலருக்கு புகைப்படம் மாறி வந்து இருக்கும். இதை ஆன்லைன் மூலம் சுலபமான முறையில் எப்படி மாற்றலாம் என்பதை பார்க்கப்போகிறோம்.
இணையதள முகவரி:
ஆன்லைன் மூலம் புகைப்படம் மாற்றுவதற்கு https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு முதலில் செல்லவும்.
புகைப்படம் மாற்றம் செய்வதற்கு:
முதலில் வலைதளத்திற்கு சென்றதும் உங்களுடைய மொபைல் எண் எந்த எண்ணை குடும்ப அட்டையுடன் இணைத்து உள்ளீர்களோ அந்த எண்ணை கொடுத்து கீழே ஒரு கேப்ட்சா எண் இருக்கும்.
அந்த எண்ணை கொடுத்து என்டர் செய்து சம்மிட் செய்தால் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு 7 எண்கள் வரும். அந்த எண்ணை கொடுத்து இப்போது லாகின் செய்யவும்.
படி : 1
உள் நுழைந்த பிறகு இவற்றில் “அட்டை பிறழ்வுகள்” என்பதை க்ளிக் செய்யவும்.
படி 2:
அடுத்து “புதிய கோரிக்கை” என்ற ஆப்ஷன் வரும். அதை இப்போது க்ளிக் செய்யவேண்டும். க்ளிக் செய்த பிறகு கீழே சேவையை தேர்வு செய்யவும் என்ற ஆப்சன் இருக்கும். அவற்றில் “குடும்ப தலைவர் உறுப்பினர் மாற்றம்” என்பதை கிளிக் செய்யவேண்டும்.
படி 3:
அடுத்து கீழே குடும்ப தலைவரின் புகைப்படம் இங்கு இருக்கும். அதில் பதிவிறக்கம் என்பதில் புகைப்படத்தினை நேரடியாக மாற்றம் செய்ய முடியாது.
இதற்கான வேறொரு ஆப்ஷன் குடும்ப தலைவராக ஆண் இருந்தால் அதை நீக்கம் செய்துவிட்டு வீட்டின் பெண்ணை கார்டில் சேர்த்து அப்லோட் செய்து சம்மிட் செய்தால் எளிமையாக புகைப்படத்தினை மாற்றிவிடலாம்.
படி 4:
ஆன்லைனில் குடும்ப தலைவரை மாற்றாமல் போட்டோ மாற்றுவதற்கு ஆன்லைனில் இதுவரை ஆப்ஷன் கொண்டுவரவில்லை. இதற்கு நேரடியாக தாலுக்கா அலுவலகம் சென்றுதான் மாற்ற முடியும்.
இதில் பெயர்களை மிகவும் சுலபமான முறையில் மாற்றலாம். அதாவது குடும்ப அட்டையில் நபர்களை பேரன் இடத்தில் பேத்தி என்றும், மகன் இடத்தில் மருமகன் இருந்தால் அந்த பென்சில் ஐக்கானை க்ளிக் செய்து அவற்றில் உறவு முறையினை சரியாக தேர்வு செய்து டிக் கொடுக்கவும்.
அடுத்து குடும்ப தலைவரின் பெயரினை மாற்ற வேண்டுமென்றால் பெயரினை சரியாக கொடுத்து புகைப்படத்தில் உள்ள இடத்தில் 5 mb அளவிற்கு(jpeg, png, jpg) format-ல் புகைப்படம் இருக்க வேண்டும்.
படி 5:
போட்டோ அப்லோட் செய்த பிறகு கீழே காரணம் என்னவென்று தமிழில் (அ) ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும். அதன் பிறகு “ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும்” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
அவற்றில் ஆதார் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து “பதிவேற்று” என்பதை கொடுக்க வேண்டும். பிறகு உறுதிப்படுத்துதல் என்ற கட்டத்தில் டிக் செய்தால் பதிவேற்று என்ற ஆப்ஷன் வரும். க்ளிக் செய்த பிறகு குறிப்பு எண் ஒன்று கொடுப்பார்கள். அந்த எண்ணை வைத்து நீங்கள் சரிபார்த்து கொள்ளலாம்.
Unlock Your Potential: Embrace the Journey
Life is a journey filled with ups and downs, and it’s during the challenging times that we truly discover our strength and potential. Don’t be disheartened by obstacles; instead, see them as a chance to grow and learn. Believe in yourself and your abilities, for you possess the power to overcome any hurdle. Embrace each new day with optimism and determination, knowing that every step you take brings you closer to your goals. Stay focused, stay motivated, and unlock the extraordinary potential within you! ✨ #Motivation #PotentialUnleashed
தமிழ்நாடு குடும்ப அட்டை வகைகள் (Tamilnadu Ration card types)